திருவண்ணாமலை ஜன, 10
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது.
இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு வருவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நித்யானந்தாவின் 46-வது அவதார தின தொடர் கொண்டாட்டங்கள் கடந்த 3 ம்தேதி முதல் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நடைபெற்று வருகின்றது.
இதையொட்டி கடந்த 6 ம்தேதி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா நாளை வரை கொண்டாப்பட உள்ளது. இந்த நிலையில் நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு லாரியில் தேர் பீடம் கொண்டு வரப்பட்டது. அதனை கிரேன் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கி ஆசிரமத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.