திருவண்ணாமலை ஜன, 8
ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டு இருந்தன. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன் அடிப்படையில் இந்த 30 லட்சத்து 29ஆயிரம் ரூபாய் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடியானது. இந்த கடன் தள்ளுபடி அரசானை சான்றிதழை ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.