புதுடெல்லி ஜன, 10
இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதி தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இடைக்கால நிர்வாக அதிகாரியாக அமுல் நிர்வாகம் ஜெயன் மேத்தா என்பவரை நியமித்துள்ளது. ஜெயன் மேத்தா கடந்த 32 வருடங்களாக அமுல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.