திருப்பூர் ஜன, 8
திருப்பூரில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய காதலியை கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தை சேர்ந்த பூஜா அங்கு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். அதே நிறுவனத்தில் பணி செய்யும் லோகேஷ் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். அதைத் தட்டிக் கேட்ட பூஜாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.