ராணிப்பேட்டை ஜன, 7
ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். பிஞ்சி ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்தவர் அஜய் இவர்கள் 2 பேரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இது சம்பந்தமாக கடந்த மாதம் 13 ம்தேதி அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி இருவரும் கஞ்சா சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் சாமுவேல் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.