பெங்களூரு ஆகஸ்ட், 11
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத்தை பெங்களூருவில் லக்சம்பர்க் நாட்டின் தூதர் பெக்கி பிரான்சின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளும் விண்வெளித்துறை திட்டங்களில் இணைந்து செயல்படுவது பற்றி அவர்கள் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின்போது, யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் சங்கரன், விண்வெளித்துறை கூடுதல் செயலாளர் சந்தியா வேணுகோபால் ஆகியோர் இருந்தனர்.