மதுரை டிச, 31
மதுரையின் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எச்சரித்தார். இது பற்றி அவர் பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிக்கிறது. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.