கீழக்கரை டிச, 30
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உலகக்கல்வியுடன் முழு குரானை மனனம் செய்து முடித்த 25 இளம் ஹாஃபிழ்கள் பட்டம்பெறும் பிரமாண்டமான அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா ஒரு மாநாடு போன்று, ஒரே நேரத்தில் ஒரே அரங்கில் ஒரே அமர்வில் வெவ்வேறு அழகிய ரகமான குரலில் முழு குரானையும் மனனமாக ஓதிக்காட்டும் அழகிய நிகழ்வு சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடைபெற்றது.
அதாயி கல்வி குழுமத்தின் தலைவர் AM.முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி தலைமையில் கீழக்கரை மற்றும் சென்னை அதாயி பெண்கள் ஹிப்ஸ் பள்ளியின் தலைவரும் துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் மற்றும் கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளியின் தலைவர் AJ ஜெஹபர் கமால் ஆகியோர் முன்னிலையில், முனைவர் தைக்கா ஒபூர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தில்லையேந்தல் நகர் மன்ற தலைவர் கிருஷ்ன மூர்த்தி மற்றும், அத்தாயி கல்வி குழுமங்களின் தலைவர்கள், முதல்வர்கள், பேராசியரியர்கள், மாணவ கண்மணிகள், இதர நிர்வாகிகள், அணைத்து ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பட்டம்பெறும் ஹாஃபிழ்களின் பெற்றோர்களுக்கு கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் இக்கல்வி குழுமத்தில் படித்த மாணவர்களில் மூன்று பேர் வழக்கறிஞராகாவும், ஒருவர் காவல் அதிகாரியாகவும், மற்றும் ஒருவர் ஐஏஎஸ் தேர்வு எழுதிக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.