கீழக்கரை டிச, 31
கீழக்கரை புகாரி ஷரீப் டிரஸ்ட் சார்பில் வருடம் தோறும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் புகாரி ஷரீப் விளக்கவுரை துவங்கி டிசம்பர் இறுதியில் நிறைவு பெறும் வகையில் விழா நடைபெறும்.
இவ்வாண்டு கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளியில் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உப தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் புகாரி ஷரீப் நிறைவு விழா நடைபெற்றது.
மௌலவி அப்துஸ்ஸலாம் பாக்கவி திருமறை வாசிக்க மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் வரவேற்புரையாற்றினார்.
மேலும் அமீரக சுன்னத் ஜமாத் பேரியக்க தலைவர் மஹ்ரூப் அறிமுக உரையுடன் புதுப்பள்ளி இமாம் மன்சூர் ஆலிம்,ஓடக்கரைப்பள்ளி இமாம் ஆரிப் ஆலிம் ஆகியோர் சீருரையாற்றினர்.
தெற்குத்தெரு ஜமாத் கத்தீப் மௌலவி யூசுப் சாஹிப் ஆலிம் சிறப்பு கூட்டு பிரார்த்தனை விளக்கமளிக்க மௌலானா ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் கூட்டு பிரார்த்தனை செய்திட பௌசுல் அமீன் நன்றியுரை கூறினார்.
இவ்விழாவில் தொழிலதிபர் பி.எஸ்.மஹ்மூது ஹுசைன், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் பெண்கள் மற்றும்
கீழக்கரை டைம்ஸ் இணை ஆசிரியர் ஹமீது யாசீன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்.
கீழக்கரை.