புதுடெல்லி டிச, 29
நடப்பாண்டில் இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடுகள் சரிவை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி அளவிலான முதலீட்டை நடப்பாண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். வேறு எந்த ஆண்டிலும் இந்த அளவு அந்நிய முதலீடு வெளியேறியது இல்லை. இதற்கு முன் கடந்த 2008ல் அதிகபட்சமாக 53 ஆயிரம் கோடி முதலீடு வெளியே எடுக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலை நன்றாக உள்ளதால் அடுத்த ஆண்டில் முதலீடு அதிகரிக்கலாம்.