கள்ளக்குறிச்சி டிச, 28
சின்னசேலம் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சின்னசேலம் வட்டார வளமையம் சார்பில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் அன்புமணிமாறன் வாழ்த்துரை வழங்கினர்.