கள்ளக்குறிச்சி டிச, 26
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கார்த்தி கேயன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.