தூத்துக்குடி டிச, 27
தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதற்கு தீர்வு காணும் வகையில் அந்தப் பகுதியில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வடிகால்களை மீண்டும் சீரமைத்து மழைநீர் சாலையில் தேங்காமல் செல்ல ஏதுவாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, முத்துவேல், பச்சிராஜ், மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.