மதுரை டிச, 27
வாடிப்பட்டி மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது.
வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாரத் நாச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிஷா தலைமையில் 82 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 41 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.