கடலூர் டிச, 27
கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.