Spread the love

நாகப்பட்டினம் டிச, 26

இயேசு கிறிஸ்து பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது. அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அற்புதராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேரலாயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர். சரியாக 12 மணி வந்த உடன் கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். பின்னர் தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றபட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

சிறப்பு திருப்பலியில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர்குவிக்கப்பட்டு இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *