துபாய் டிச, 24
ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் நான்காவது ஆண்டாக அபுதாபி ADNOC சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி தெருவை சேர்ந்த அபுதாபியில் பணிபுரியும் இளைஞர் பரக்கத் அலி என்பவரும் இதில் கலந்துகொண்டார்.
மேலும் இவர் போட்டி துவங்கிய இடத்தில் இருந்து போட்டி நிறைவடையும் இடம் வரை சோர்வடையாமல் ஓடி தனது ஓட்டத்தை நிறைவுசெய்தார். இப்போட்டியில் கலந்து கொண்டவர்களில் குறைந்த நபர்களே நிறைவு பகுதியை அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.