கோயம்புத்தூர் டிச, 22
சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறு ஒரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,
வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் போராடி வருகின்ற ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தலில் ஏற்கனவே நிலம் அதிகப்படுத்தப்பட்டு விட்டது. புதிதாக எந்த நிலமும் கைல படுத்த மாட்டாது. விவசாயிகளின் ஒப்புதலோடு தான் நிலம் கையகப்படுத்தப்படும். விவசாயிகளின் ஒப்புதல் இன்றி தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலங்களை அரசு கையகப்படுத்தாது. அது தான் முதலமைச்சரின் நிலைப்பாடாகவும் உள்ளது என அவர் கூறினார்.