புதுடெல்லி டிச, 19
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விரைவில் அரசு புதிய சட்டத்தை கொண்டு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர், இது குறித்து பல தரப்பினரிடம் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை அரசு கொண்டுவரும் என உறுதியளித்தார்.