திருவண்ணாமலை டிச, 18
போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் பாண்டுரங்கன், வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் ஏழுமலை, கிளை செயலாளராக அல்லி நகர் சங்கர், கிளை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.