சென்னை டிச, 18
வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்புடன் பணமும் கொடுக்கப்பட உள்ளது. பணத்தை ரொக்கமாக தரலாமா வங்கிக் கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரிய கருப்பன் துரைமுருகன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
