கள்ளக்குறிச்சி டிச, 16
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்தில் பிள்ளை யார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏரி, குளங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையிலும் இந்த ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. ஆகவே இந்த ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்க ளை தூர்வாரி, ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
மேலும் ஏரி, குளங்கள் தூர்வாரப்படா ததால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் பிள்ளையார்குப்பம் பஸ்நிறுத்தம் பகுதியில், திருவெண்ணைநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏரி, குளங்களை தூர்வாரக்கோரி கோஷமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை திருநாவலூர் ஆய்வாளர் அசோகன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மேலும் தங்களது கோரிக்கை யை மாவட்ட நிர்வாகத்திடம் கூறுவதாக ஆய்வாளர் அசோகன் உறுதியளித்தார்.