கோவை டிச, 16
கோவை அன்னூரில் தொழிற்பூங்க அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என அரசு உறுதி கூறியுள்ளது. இது பற்றிய அறிவிப்பில், தொழிற்பூங்கா அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். விவசாயிகள் மனமுவந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். காற்று, நீரை பாதிக்காத ஆலைகளுக்கு மட்டும் தொழில் பூங்காவில் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.