சென்னை டிச, 16
ஒரு மொபைல் எண்ணுக்கு போன் செய்வது, குறிப்பிட்ட வங்கிகளின் பெயர்களின் பயன்படுத்தி, பிரதமரின் திட்டங்கள் உங்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறுவது, மேலும் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளை சரிபார்ப்பதாகக்கூறி, அவர்களின் சேமிப்பு கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம்., எண்களையும் ஆங்கிலத்தில் கேட்கின்றனர்.
படித்தவர்கள் இதன் விபரம் அறிந்து, பொருட்படுத்தாமல் விடுகின்றனர். ஆனால், படிக்காதவர்கள், சிலர், வங்கிகளிலிருந்துதான் அழைப்பதாக எண்ணி, விபரங்களை கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
அது மட்டுமின்றி, பொதுமக்கள், இதுபோன்ற வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி, விபரங்களை கேட்டால், அது குறித்து ‘சைபர் கிரைம்’, காவல் துறையில் புகார் அளிக்கலாம் எனக்காவல் தலைமை இயக்குனர் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மோசடி கும்பலின் வேலை நூதன முறையில் வேறு விதமாக ஆரம்பித்து உள்ளது. நண்பர் ஒருவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்சூரன்ஸ் செய்ததாகவும் அது பழைய பாலிசி எனவும் தற்போது பிரீமியர் தொகை கட்டினால் தங்களுக்கு மொத்தத் தொகையும் கிடைத்துவிடும் என அழைத்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் ஏமாற்றுக்காரர்களின் மூளையும் விதவிதமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நூதன திருட்டுக்கள் அதிகரித்து வரும் வேளையில் பொதுமக்கள் தான் விழிப்புணர் உடன் செயல்பட வேண்டு.