திருவண்ணாமலை டிச, 15
கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரவி இளஞ்செழியன் தலைமை தாங்கினார்.
மேலும் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே. அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.