சென்னை டிச, 15
தமிழகத்தில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. 3 அரசு செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் அவர் 10வது இடத்தில் இருப்பதால் சட்டசபையில் அமைச்சர்களுக்கான 2 வரிசையில் முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெறுவார்.