நேபாளம் டிச, 14
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.கவ்ரேபலன்சோக் மாவட்டத்தில் திருவிழாவுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தில் 30 பேர் பயணம் செய்தனர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.