ராமநாதபுரம் டிச, 13
ராமநாதபுரம் பரமக்குடியை அடுத்த சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த கார் ஒன்றில் 88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த போதை பொருட்களையும் காரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த இரண்டு பேரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.