ராமநாதபுரம் டிச, 13
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா பேருந்து கொடியசைத்து துவக்கி வைத்து வழி அனுப்பினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.