ராமநாதபுரம் டிச, 12
ராமநாதபுரம் அருகே வாலி நோக்கத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையால் அரசு உப்பு நிறுவனத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான கல் உப்புகள் நிறுவன முகப்பு பகுதியில் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன. உப்பை பாதுகாப்பாக வைக்கும் வகையில் தார்பாய் கொண்டு மூடாததால் பெய்து வரும் மழையால் கல்லுப்பு வீணாக கரைந்து வருகிறது.