கீழக்கரை டிச, 11
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் உலக மனித உரிமைகள் தின விழா ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஹபீப் முகம்மது தலையேற்று தவ்ஹீதி ஆலிம் துவக்கி வைக்க சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்றார்.
மேலும் கீஜ்ஜி நிறுவனத்தின் இணை இயக்குநர் அப்துல் ரஹ்மான் அறிமுக உரையாற்ற, மக்கள் கண்காணிப்பக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இப்றாகீம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாலிஹு ஹுசைன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நீதிபதி பரணிதரன் சாதனையாளர்களுக்கு கேடயம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். சட்ட விழிப்புணர்வு இயக்க பொருளாளர் ஜாபிர் சுலைமான் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.