துபாய் டிச, 11
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் சங்க உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் மெரினா கடற்கரையில் யார்ட் எனும் உல்லாச படகில் ஆடல் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்குடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உறுப்பினார்கள் குடும்பங்களோடு மற்றும் துபாய் டிக்டாக் பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக
தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் முதன்மை நிருபரும் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியரான நஜீம் மரிக்கா, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கே.வி.எல்.கமால், அரவிந்த் குழும நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகர், பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது ஒரு மனநிறைவான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்று அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா கூறி நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு.