திருப்பத்தூர் டிச, 10
நாட்டறம்பள்ளி வட்டம் டி.வீரப்பள்ளி பகுதிநேர நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்டம் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4 வகுப்பு மாணவர்களை கலெக்டர் ஆங்கில பாடத்தை படித்து காண்பிக்க கூறினார். மேலும் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவு சாப்பிட்டு சமையல் எப்படி உள்ளது என்பது குறித்து ருசித்து பார்த்து மாணவர்களுடைய கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், நியாய விலைக்கடை விற்பனை யாளர்கள், பள்ளிஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.