சென்னை டிச, 10
மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரி கார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. மீட்பு படையினர் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.