Spread the love

பர்மிங்காம் ஆகஸ்ட், 9

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது .
இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ,கனடா 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. .இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ம் ஆண்டு நடைபெறுகிறது
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன.

இதன் நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியகொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகத் ஆகியோர் ஏந்தி அணியை வழிநடத்தி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *