ஜெய்ப்பூர் டிச, 6
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது.
அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. இதையடுத்து ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் நேற்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.