மாஸ்கோ டிச, 4
உள்நாட்டு தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ரஷியா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதன்படி, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா பட்டியல் கொடுத்துள்ளது.
மேலும் 14 பக்கங்களை கொண்ட அந்த பட்டியலில் கார் எஞ்சின் உதிரி பாகங்கள், சீட் பெல்ட் முதல் விமானத்தின் லேண்டிங் கியர், ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள், விமான டயர்கள் வரை என 500 ம் மேற்பட்ட பொருள்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.
500 பொருட்கள் அடங்கிய பட்டியலில் ஆயத்த ஆடை தயாரிப்பு பயன்படும் நூல் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்த தகவல் வெளியாகவில்லை.