சென்னை டிச, 2
நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதலரான சோஹேல் கதுரியாவை வரும் டிசம்பர், 4 ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் திருமண சடங்காக, நேற்று மெஹந்தி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஹன்சிகாவுக்கு மெஹந்தி வைத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.