நாமக்கல் டிச, 2
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவு, மற்றும் சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையில், இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து மாவட்ட வருவாய் அலுவலர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள், காவல் துறையினர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.