நாமக்கல் நவ, 29
பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் வசந்தபுரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பரமத்தி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக பரமத்தி ஒன்றிய திமுக செயலாளரும், ஆத்மா தலைவருமான தன்ராஜ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டன.
இம்முகாமில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் வசந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர், வட்டார சுகாதாரமில்லா மேற்பார்வையாளர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் , மருந்தாளுனர்கள், வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புணர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.