புதுச்சேரி நவ, 29
புதுச்சேரியில் 2006 முதல் 2016 கல்வி ஆண்டு வரை கலை அறிவியல் கல்லூரியில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் வைத்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், தேர்வு கட்டணம் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.