சென்னை நவ, 26
ஐ.ஐ.டியில் சேர்வதற்கான ஜே.இ.இ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்காலத்திலும் இதே முறையில் தேர்வை நடத்த மாநில அரசுகளுடன் தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. 2023 ஜே.இ.இ மெயின் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது.