கடலூர் ஆகஸ்ட், 8
நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்ற என்ஜினீயர் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை, என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை புறக்கணிக்கிறது என்றும், 299 என்ஜினீயர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நெய்வேலி இந்திராநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், ஜெகதீச பாண்டியன், அமுதா நம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் நெய்வேலி தொகுதி செயலாளர் வீரமணி, தொகுதி பொருளாளர் திருஞானம், நகர தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.