பெரம்பலூர் நவ, 28
பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது.
இவ்விழாவிற்கு யூனியன் நகர் மன்ற தலைவர் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.