பாகிஸ்தான் நவ, 25
பாகிஸ்தான் ராணுவத்தின் உச்ச பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. தற்போதைய ராணுவ தளபதியின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே அவருடைய இடத்திற்கு சையது அசிம் முனீரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் அறிவித்துள்ளார். இதே போல் கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவையும் ஷெரீஃப் நியமித்துள்ளார்.