துபாய் நவ, 24
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் தலைமை இரத்த தான மையம் மற்றும் கிரீன் குளோப் நிறுவனம் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இரத்த தான மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இரத்த தானத்தில் அமீரகத்தில் பல்வேறு தரப்பில் இருந்து சிறப்பு விருந்தினர்கள், அமீரக தமிழ் குழுக்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து,முகாமை இணைந்து நடத்திய கிரீன் குளோப் நிறுவனர் சமூக சேவகி ஜாஸ்மீன் ஆற்றிய உரையில்,
இரத்த தானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்போம்,
தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள ரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம் என கூறினார்.
மேலும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் எங்களது மனமாரந்த நன்றியினை கூறிக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.