சென்னை நவ, 23
தி.மு.கவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்பு வழங்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ஜோயஸ், மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோ நியமிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி துணை பொதுச்செயலாளராக ஆனதால், அவர் வகித்த பதவி ஹெலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.