Spread the love

தஞ்சாவூர் நவ, 23

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குவழங்கப்பட்டுள்து.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் அவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *