புதுச்சேரி நவ, 19
முதலியார் பேட்டை தொகுதி துலுக்கானத்தம்மன் நகரில் முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சத்தை ஒதுக்கி புதிதாக வாய்க்கால் வசதி அமைக்க புதுச்சேரி நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கான பூமி பூஜை துலுக்கானத்தம்மன் நகர் 8-வது குறுக்கு தெருவில் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறி யாளர் வெங்கடாஜலபதி, இளைநிலை பொறியாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்