கொடைக்கானல் நவ, 19
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21ம் தேதி முதல் 27 ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் தலைமை வகிக்கிறார். பழனி மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லூர்து மேரி இருவரும் முன்னிலை வகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்புரை வழங்குகிறார். குழந்தை இயேசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லாரன்ஸ் போஸ்கோ மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் சௌந்தரராஜ் வாழ்த்துரை வழங்கி, அருட் சகோதரி ஸ்டெல்லா அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதில் NSS மாணவிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். அவை குறித்த விபரங்கள்,
இந்நிகழ்ச்சி இந்த மாதம் 22 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை பொது மருத்துவ முகாம் மருத்துவர் நந்தினி RBSK மருத்துவ அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3:30 மணிக்கு இயற்கை வழி நல வாழ்வியல் பேரணி, மாலை 5 மணிக்கு கற்றவை கல்வி சுடராய் பற்றவை எழுத்தறிவித்தல், மாலை 6 மணிக்கு வளர் இளம் பருவத்தினருக்கான இயற்கை உணவும் நோயில்லா வாழ்வும் இந்நிகழ்ச்சிகளை புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை மேக்தலின் ஜெயா வழிநடத்த உள்ளார்.
23ம் தேதி புதன்கிழமை காலை என்.எஸ்.எஸ் திட்ட மாணவிகள் சார்பில் முகாமை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வும் அதன் சேவையும் திண்டுக்கல் கிரைம் காவல் நிலையம் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
24ம் தேதி வியாழக்கிழமை தொலைத்தொடர்பு சாதனங்களின் தொலைந்து கொண்டிருக்கும் பெண்மை என்ற தலைப்பில் பேரணி நடைபெற உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்ற கொடைக்கானல் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் அவர்கள் சட்டம் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு உரை ஆற்ற உள்ளார்.
25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3:30 மணிக்கு என்.எஸ்.எஸ் திட்ட மாணவிகள் வரவேற்புரையில் கொடைக்கானல் வருவாய் கோட்ட அலுவலர் ராஜா சிறப்புரையாற்ற உள்ளார்.
26 ம் தேதி சனிக்கிழமை காலை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 3:30 மணிக்கு மரம் நடும் விழா நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லில்லி கிரேஸ் வழி நடத்துகிறார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரபல தொழிலதிபர் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் ஆசிரியர் இம்பாலா சுல்த்தான் செய்யது இப்ராஹிம் மற்றும் நீச்சல் போட்டியில் யோகா நிலையில் ஆசிய அளவில் சாதனை புரிந்த மாணவன் இம்பாலா இன்ஷாஃப் முகம்மது பரிசுகளை வழங்குவார்கள்.
மேலும் 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து மேரி தலைமையில் முகாம் மதிப்பீடு நடைபெற உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு முகாம் பராமரிப்பு நடைபெறும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விழாவினை கலந்து சிறப்பிக்குமாறு, பள்ளியின் தாளாளர் ஸ்டெல்லா, தலைமை ஆசிரியர் லூர்து மேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, செல்வ சகாயராணி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.